விக்ரமுக்கு ஜோடியாகிறாரா நடிகை ராஷி கண்ணா?

103

ராஷி கண்ணா..

தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராஷி கண்ணா, அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான ஆறு, வேல், சிங்கம் பட வரிசைகள் என அனைத்தும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தன.

இதனிடையே ஹரியும் சூர்யாவும் ‘அருவா’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடித்து படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து இயக்குனர் ஹரி விக்ரமுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவின.

இந்நிலையில் அப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.