பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் அனிதா !! காரணம் இதுதான் !! கணவர் க டு ம் கோ பத்துடன் வெளியிட்ட பதிவு இதோ !!

132

அனிதா…….

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.60 நாட்களுக்கு மேலாகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.குறிப்பாக அணைத்து போட்டியாளர்களும் தங்களது முழு உத்தியையும் பயன்படுத்தி போட்டியில் முன்னேறி கொண்டிருக்கின்றனர்.

அதே சமயம் வாராவாரம் போட்டியில் எவிக்சனும் ப ர ப ர ப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில் கடந்தவாரம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சம்யுகதா வெளியேற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது பல நபர்கள் இந்த வாரத்திற்காக நாமினேட் ஆகி இருக்கும் நிலையில் செய்தி தொகுப்பாளர்க இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அனிதா இந்த வாரம் வெளியேறப்போவதாக தெரிகிறது.

அனிதாவின் கணவர் பிரபாகரன் தனது மனைவியின் தற்காலிக பிரிவைப் பற்றி இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “காதல் என்பது… உன்னை பார்க்க போகிறேன் மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்பது போல் கூறி, ஆறாம் தேதியை குறிப்பிட்டு உள்ளார்.

உடனே அனைவரும் ‘என்னது அனிதா போட்டியில் இருந்து வெளியேற போகிறாரா’ என்பது போல் அவரை கேட்க ஆரம்பித்துள்ளனர். உடனே அவர் அதற்கு விளக்கம் தரும் வகையில் “நான் அனிதாவை மிகவும் மிஸ் செய்கிறேன். அவரது எலிமினேஷன் பற்றி இப்பொழுது தெரியாது. அதனால் தான் இப்படி பதிவிட்டேன். பயப்பட வேண்டாம்” என்பது போல் அவர் கூறியுள்ளார்.