#കേരളംLovesതമിഴകംവാഴുംTHALA – Twitter Trending-இல் மாஸ் காட்டும் கேரளா தல ரசிகர்கள் !

68

அஜித்…

பொதுவாகவே அஜித்திற்கு தமிழ்நாட்டை தாண்டி வேறு எங்கும் பெரிதாக மார்கெட் இல்லை என்பது எதிர் தரப்பான விஜய் ரசிகர்களின் கருத்து. அவர்கள் இந்த கருத்தை முன் வைத்த நேரம், அஜித்தின் படங்களுக்கு ஹிந்தியில் வரவேற்பு கூடியது, போதாகுறையாக தற்போது கேரளாவில் உள்ள தல ரசிகர்கள்,

” #കേരളംLovesതമിഴകംവാഴുംTHALA” என்று டிவிட்டரில் டிரெண்ட் செய்ய தொடங்கிவிட்டார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்று பார்த்தால், ” Kerala loves Tamilnadu Thala Ajith” என்று அர்த்தமாம்.

இந்த டிவிட் கிட்ட தட்ட 5 லட்சத்து 75 ஆயிரத்தை தாண்டியது இந்த டிரெண்ட். அப்புறம் என்ன பா கேரளா தல கோட்டை என அறிவிவிச்சுடலாமா என்று எண்ணி வருகிறார்கள்.

தற்போது இவர் நடித்து வரும் வலிமை படத்தில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் பயங்கர வேகத்தில் பைக்கில் வந்த தல அஜீத் திடீரென நிலைதடுமாறி ரோட்டில் விழுந்து விட்டாராம்.

பின்னர் எழுந்து பார்த்தபோது கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் தோலுரிந்து ரத்தம் கொட்டி உள்ளது. இருந்தாலும் என்ன பிளான் செய்தார்களோ அதை முடித்துவிட்டு தான் சென்னை வந்துள்ளார் தல அஜித்.

இந்த நிலையில் தல அஜித் எப்படியாவது பொங்கலுக்குள் படத்தின் ஷூட்டிங்கை முடிக்க வேண்டும், வர ஏப்ரல் 14 அல்லது மே 1 என்று என வலிமை படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழுவினரை கேட்டுகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.