சீரியலில் இருந்து மகள் வெளியேறிய காரணத்தை சொல்லட்டுமா? : லிவிங்ஸ்டன்

137

ஜோவிதா…

பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா. நடிகை அம்பிகா மகன் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் வெளிவராத நிலையில் பூவே உனக்காக தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிக்கத் தொடங்கிய சில மாதங்களிலேயே அந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜோவிதாவின் தந்தையும், நடிகருமான லிவிங்ஸ்டன், மகளின் விலகல் குறித்து கூறியிருப்பதாவது: ”பூவே உனக்காக சீரியலில் இருந்து மகள் விலகியது நாங்களாக எடுத்த முடிவு. யாரும் விலக்கவில்லை.

நடிக்கத் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே இப்படியொரு முடிவை எடுக்கத் தள்ளப்பட்டதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. விலகலுக்கு நிறைய காரணம் இருக்கிறது.

அதை இப்போது சொல்லி சம்பந்தப்பட்டவர்களை நோகடிக்க விரும்பவில்லை. டிசம்பர் 15ல் மகள் விலகுகிறார். அதன்பிறகு தேவைப்பட்டால் காரணத்தை சொல்வோம்” என்கிறார்.