பாகுபலி வசூலை முறியடிக்க வரும் பிரமாண்ட திரைப்படம்.. தயாரிப்பாளரின் அதிரடி பேட்டி..!

130

ஆர்.ஆர். ஆர்…

எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என பல திரை பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் பாகுபலி.

இப்படத்தின் முதல் பகுதி ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இரண்டாம் பாகம்,

ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்தியளவில் பிரமாண்ட சாதனை படைத்தது.

இந்நிலையில் எஸ்.எஸ். ராஜமௌளி இயக்கத்தில் ரேம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஆர்.ஆர். ஆர் திரைப்படம், பாகுபலியின் வசூலை முறியடிக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் உறுதியாக கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் தான் இப்படத்தின் கதாபாத்திரங்களின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இதனால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.