திருமணத்திற்கு பின் காஜல் அகர்வால் ஒப்பந்தமான முதல் படம்: டைட்டில் அறிவிப்பு!

132

காஜல் அகர்வால்..

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பதும், திருமணத்திற்குபின் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார்

என்பதும் தேனிலவில் இருக்கும் போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்களும் வீடியோக்களும் பயங்கரமாக வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

தற்போது தேனிலவை முடித்து விட்டு நாடு திரும்பி இருக்கும் காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின்னர் முதல்முறையாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

’கோஸ்ட்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்யாண் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜாக்பாட், குலேபகாவலி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஃபேண்டசி ஹாரர் படமான இந்த படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி மற்றும் கோலமாவு கோகிலா புகழ் டோனி உள்பட 24 காமெடி நடிகர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் ஒரு முன்னணி நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே காஜல் அகர்வால் சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சாரியா’ மற்றும் கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2 ’ படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.