உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாய் மாறிய நடிகர் பஹத் பாசில்- ஷாக்கான ரசிகர்கள் !

765

பஹத் பாசில்…

மலையாளத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான Kaiyethum Doorath எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையில் அறிமுகமானவர் நடிகர் பஹத் பாசில்.

இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. சமீபத்தில் வெளியான சி யு சூன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.

நடிகர் பஹத் பாசில், தன்னுடன் நடித்த சக நடிகையான, நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சில வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் டிரான்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

நடிகர் பஹத் பாசில் ஒவ்வொரு படத்தின் கதைக்கு ஏற்றார் போல் தனது உடலமைப்பை மாற்றிக்கொள்வார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் புதிய படத்திற்காக கிட்டத்தட்ட 12 கிலோ வரை தனது உடல் எடையை குறித்து எலும்பும் தோலுமாய் மாறியுள்ளார்.