மாலத்தீவில் இருந்து திரும்பிய சமந்தா!! வெளிவந்த புகைப்படம்!

101

சமந்தா…..

மாடல் அழகியாக தோன்றி, தன்னுடைய கடுமையான முயற்சியினால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு வாரிசு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார்.

இருப்பினும் இவர் தனது கேரியரை ஸ்டாப் செய்யாமல் பல முன்னணி நடிகைகளுக்கு கடும் போட்டியாக திகழ்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதும், ஃபேஷன் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் ஆடை வடிவமைப்பு விற்பனை செய்வது என தனது பன்முகத் திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

தற்போது சமந்தா தன்னுடைய கணவனின் பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடி விட்டு திரும்பிய கையோடு இணையத்தில் வைரலாகும் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் மாலத்தீவில் இருக்கும்போது பிகினி உடையில் சமந்தா இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை திணறடித்திருந்தார்.

அதைப்போல் தற்போது இவர் பதிவிட்டுள்ள போட்டோவில் சமந்தா ஸ்கூல் ஃப்ராகில் கும்முனு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.

எனவே இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் ‘கல்யாணம் ஆனாலும் உங்க அழகை அப்படியே கச்சிதமாக மெயின்டெயின் பண்றீங்க’ என்று சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.