விக்ரம் சாய் பிரசாத்…
விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சூப்பர் சிங்கர். ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரு பிரிவுகள் மாறிமாறி நடந்து கொண்டிருந்தாலும் இரண்டுமே மக்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் மூக்குத்தி முருகன் வெற்றி பெற்றார் என்பதும் அவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
அதேபோல் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியின் இரண்டாவது பரிசை பெற்றவர் விக்ரம் சாய் பிரசாத். இவருக்கு 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விக்ரம் சாய்பிரசாத்துக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர் என்பதும் பெண் ரசிகைகள் ரொமான்ஸாக இவருக்கு கடிதம் எழுதும் காட்சிகளும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவ்வப்போது ஒளிபரப்புவது காமெடியாக ஒன்றாக இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் விக்ரம் சாய்பிரசாத்துக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் புகைப்படங்களை அவர் ஏற்கனவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டார்.
என்பதும் அதன் பின்னர் அவர் தனது மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற புகைப்படத்தையும் வெளியிட்டார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.