இந்தியன் 2-வை தள்ளி வைத்து விட்டு கே.ஜி.எஃப் பட ஹீரோவுடன் கைகோர்க்கும் ஷங்கர், வெளியான புதிய தகவல்..!

123

ஷங்கர்…

ஷங்கர் 2.0 திரைப்படத்திற்கு பின் மீண்டும் நடிகர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கிவந்தார்.

இப்படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாக பல மாதங்களாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் கொஞ்சம் நாட்களுக்கு இந்தியன் 2 திரைப்படம் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாம், வரும் ஜனவரி மாதம் முதல் நடிகர் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் படத்தை தொடங்கவுள்ளார்.

இதனால் வேறு ஒரு டபுள் ஹீரோ படத்தை இயக்கவுள்ளாராம் இயக்குனர் ஷங்கர். ஆம், அப்படத்தில் கே.ஜி.எஃப் பட பிரபலம் யஷ் மற்றும் துருவ் விக்ரம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.