உங்க யாருக்கும் பேட்டி தரமாட்டேன், கொந்தளித்த ஆண்ட்ரியா : காரணத்தை கேட்டால் ஷாக் ஆவீர்கள்!!

1194

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த தரமணி படம் இவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்தது.

இந்நிலையில் ஆண்ட்ரியா நடிப்பில் ஒரு டப்பிங் படம் ஒன்று தமிழில் வரவுள்ளது, இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

அப்போது பல பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க, புகைப்படம் எடுக்க காத்திருக்க, ஆண்ட்ரியா வந்து ‘உங்களுக்கு யாருக்கும் பேட்டி தரமாட்டேன்’ என கோபமாக சொல்லி நகர்ந்தாராம்.

என்ன என்று விசாரித்தால், அவரிடம் ‘நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா, சரக்கு அடிப்பீர்களா?’ போன்ற கேள்வியை கேட்கிறார்களாம், இதனால் கோபமான ஆண்டரியா பேட்டி கொடுக்க மாட்டேன் என்று சொன்னாராம்.

இதை பார்த்த பலருக்கும் ஷாக் தான், என்ன இவராகவே ஏதோ சொல்லி நம்மிடம் கோபித்துக்கொள்கிறாரே என்று.