அஜித்திற்கு அம்மாவாக நடிகை சுமித்ராவா ?

112

சுமித்ரா….

ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு

கடந்த அக்டோபர் மாதம் முதல் மீண்டும் துவங்கியுள்ளது. இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் அஜித்திற்கு அம்மாவாக மூத்த நடிகை சுமித்ரா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வீரம் படத்தில் தமன்னாவிற்கு அம்மாவாக, அதாவது அஜித்திற்கு மாமியாராக சுமித்ரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.