என்னது அந்த ரஜினி பட டைட்டிலுக்கு ஒரு கோடி கொடுத்தாரா ராகவா லாரன்ஸ் ? என்ன படம்னா ?

131

ரஜினி…

ரஜினி நடித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் வெற்றி நடைபோட்ட சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்கப் போவதாகவும் அந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பி வாசு அவர்கள் இயக்கப் போவதாகவும் தன்னுடைய அதிர்ஷ்டமான தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கப் போவதாகவும், அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் ஆச்சரியப்படும் தகவல் என்னவென்றால், சந்திரமுகி படத்தில் சிம்ரன் தான் கமிட் ஆகி நடித்தார். ஆனால் அவர் அந்த சமயத்தில் கர்ப்பம் ஆகி விட்டதால் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

முக்கியமான விஷயம் என்ன என்றால், சந்திரமுகி படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்த நிலையில் சந்திரமுகி டைட்டிலுக்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்களாம்.

இதுவரை பழைய பட டைட்டிலுக்கு இவ்வளவு விலை கொடுத்ததில்லை என்று டிரேடிங் வட்டாரம் சொல்கிறார்கள்.