விக்ரம் படத்தில் நடிகர் கமலை வில்லனாக மிரட்ட களமிறங்கும் முன்னணி நடிகர், வெளியான சூப்பர் தகவல்..!

694

விக்ரம்…

நடிகர் கமல் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவரின் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உண்டு.

கடைசியாக இவர் நடிப்பில் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகியிருந்தது, அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போதுவரை இப்படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் நடிகர் கமலின் தீவிர ரசிகர் என்பதால் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் கமலின் பிறந்தநாள் அன்று விக்ரம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு செம மாஸ்ஸாக நடிகர் கமலை காண்பித்துள்ளதால். இந்த டீசர் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் ஒரு முக்கிய நடிகர், ஆம் மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் ஃபகத் பாசில் தான் அப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்ட வருகிறார்.

மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.