ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, எந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் தெரியுமா?

797

தலைவி..

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தலைவி.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படத்தில்

ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாத், எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சமுத்திரக்கனியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். ஆம் இது குறித்த அவரின் பதிவில், இப்படத்தில் தனக்கான படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும்.

இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சமுத்திரக்கனி. மேலும் இப்படத்தில் அவர் RM வீரப்பன் கதாபாரத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.