சனம் வெளியேற்றம் : மீரா மிதுனின் மோசமான பதிவு !

145

மீரா மிதுன்…

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பை நோக்கி செல்லத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது. நேற்று முந்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் போட்டியிலிருந்து சனம் வெளியேற்றப்பட்டார். மற்ற சிலரைப் போல் ஒரு குரூப்பாகச் செயல்படாமல் தனித்து செயல்பட்டார். சக போட்டியாளர்களான பாலாஜி உள்ளிட்ட சிலர் கடுமையாக அவமானப்படுத்தினாலும் அதையெல்லாம் சமாளித்தார்.

அவருடைய போட்டி மனப்பான்மையைக் கண்டு அவருக்கு நிறைய பேர் ரசிகர்களானார்கள். ஆனால், நேற்று அவர் வெளியாகப் போகிறார் என இரு தினங்களுக்கு முன்பு தெரிய வந்ததுமே பலரும் இதையெல்லாம் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். விஜய் டிவி வேண்டுமென்றே சிலரை வெளியேற்ற முடிவு செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனிடையே, கடந்த பிக் பாஸ் சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்த மீரா மிதுன், நிகழ்ச்சியிலிருந்து சனம் வெளியேறியது குறித்து, அருவெறுப்புடன் ஒரு பதிவு செய்துள்ளார்.

“ஒரு மகிழ்ச்சியான தருணம் கடைசியில் வந்துவிட்டது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து டுபாக்கூர் வெளியேறிவிட்டார். வெளியில் வந்து டுபாக்கூர் ஷோக்களை செய், வாழ்த்துகள் டுபாக்கூர்.

மேலும், “இந்த பூமியில் தர்ஷன் மிகவும் மகிழ்ச்சியானவராக இருப்பார். அவருடைய முன்னாள் காதலியின் குணம் என்னவென்பது வெளியில் தெரிந்துவிட்டது.

விஜய் டிவி, பிக்பாஸ் நல்ல வேலை செய்தீர்கள். ‘அம்புலி’ நாயகன் சொர்க்கத்திலிருந்து சிரித்துக் கொண்டிருப்பார்,

டுபாக்கூர் எப்போதும் டுபாக்கூர் தான்” என்றும் தரக்குறைவான வார்த்தைகளுடன் சனம் வெளியேறியது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.