ஆஸ்திரேலியாவில் நடராஜனுக்கு GROUND-ல் வாழ்த்து தெரிவித்த அஜித் ரசிகர்கள் ! சிட்னியில் அமர்க்களம் !

86

அஜித் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் டாப் 3 இல் இருக்கும் நடிகர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். அஜித்துக்கு நடிப்பு மட்டுமின்றி விளையாட்டுத்துறையில் கூட ஆர்வம் அதிகம்.

உதாரணத்திற்கு அவர் கார் ரேஸ் பந்தயத்தில் வல்லவர். அதுபோல் மற்ற விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். அவரது ரசிகர்கள் பலரும் விளையாட்டுத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள்.

இந்நிலையில் தற்போது T20 World Cup நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், நம்ம ஊரு வீரரான நடராஜன் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக நடிகர் அஜித்தின் ரசிகர்கள் செய்துள்ள செயல் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் அடித்து, கிரவுண்டுக்கு அஜித் ரசிகர் ஒருவர் சென்றுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அந்த ரசிகர், ”எனது வாழ்நாள் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.

தல ரசிகர்களின் வாழ்த்துக்களை இந்திய அணிக்கும், நடராஜனுக்கும் நேரடியாக இங்கே கொண்டு வந்து இருக்கிறேன்” என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.