சூப்பர் ஹீரோ சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி – ராதிகா உருக்கம் !

103

சரத்குமார்…

“நீ ஏழையா இரு இல்லனா கோழையா இரு, யாரா வேணா இரு, ஆனா என்கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு…” என்று கொரோனா நமக்கு அறிவுறுத்தும் வகையில் இருக்கிறது நம்ம லட்ச்சனம்.

ஏழை பணக்காரர் என பாகுபாடின்றி என அனைவருமே இந்த வைரஸ் தொற்று பரவுகிறது.

கோலிவுட்டில் விஷால், தமன்னா, நிக்கி கல்ராணி,SPB, விஜயகாந்த் மற்றும் பாலிவுட்டில் அமிதாப், அபிஷேக், ஐஷ்வர்யா ராய், தெலுகு திரைப்பட உலகில், ராஜமௌலி, சிரஞ்சீவி போன்ற பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது நடிகை வரலக்ஷ்மி தந்தையும், ராதிகாவின் கணவரும், நடிகருமான சரத்குமாருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராதிகா அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.

இதனால் ட்விட்டர்வாசிகள் சற்று அதிர்ந்து போக, “உடனே அவர் நல்ல மருத்துவர்களிடம் தான் இருக்கிறார். அவரைக் குறித்த அப்டேட்களை அப்போது தருகிறேன்” என்று வாக்குறுதி கொடுத்துள்ளார் ராதிகா.

தமிழ் சினிமாவின் வில்லனாக அறிமுகமாகி வலம் வந்தவர் சரத்குமார், அதன் பின்னர் ஹீரோவாக பட்டையை கிளப்பினார். தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.