ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்யின் செல்பி ! ஆரவாரத்தில் ரசிகர்கள் !

112

விஜய்…

இந்த வருட ஆரம்பத்தில், நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமானவரித் துறை அதிகாரிகள் கையோடு அழைத்துக் கொண்டு சென்னை வந்தனர்.

கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள அவருடைய வீட்டை சோதனையிட்டனர். அதன் பின் அவரிடம் ஒன்றும் சிக்கவில்லை என்று வந்துவிட்டார்கள்.

அதன் பிறகு அதை எல்லாம் தூசியாக தட்டிவிட்டு நெய்வேலி படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய்.

இன்று அவருக்கு இந்த Raid – இல் கலங்கிய ரசிகர்களை பார்க்க வேண்டும் என்று விஜய் ஆசை பட்டு ஒரு பெரிய Van மீது ஏறி ரசிகர்களை சந்தித்து கை காட்டினார், selfie எடுத்தார். பேராதரவு, பெரும் whistle சத்தம், பெரும் ஆரவாரம் தான்.

தற்போது அந்த செல்பி புகைப்படம்தான்அதிகம் ரி-டிவீட் செய்யப்பட்ட ட்வீட் என டிவிட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆரவாரம் அடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.