நடிகை அம்பிகா……….
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அதில் முன்னணி நடிகர்கள் படங்களில் இவர்தான் சரிபட்டுவருவார் என்று சிலர் மட்டுமே இருந்து வந்தனர்.
காலம் போகப்போக தற்போது வரை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் சிலரே. அந்தவகையில் வருடத்திற்கு ஏதாவது படங்களில் நடித்தும் வந்தவர் நடிகை அம்பிகா.
இதையடுத்து, 1988 ஆம் ஆண்டு என்ஆர்ஐ பிரேம் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டார். ஆனால் 1996 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின்னர் 2000 ஆண்டு நடிகர் ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரே வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
தற்போது சின்னத்திரையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அம்பிகா பற்றி சர்ச்சைகுரிய பதிவினை பேட்டியில் கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்.
அவர் கூறியது, சில ஆண்டுகளுக்கு முன் நடிகை அம்பிகாவை பேட்டியளித்தேன். அப்போது எனக்கு எத்தனை கணவர்கள் இருக்கிறார்கள் என்று நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள் என்று காமெடியாக கூறியுள்ளார்.
ஆனால் இரண்டு மகன்கள் மட்டும் தான் அம்பிகா ஜாலியாக குறிப்பிட்டாராம். அதை கேலியும் கிண்டலுமாக கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒரு நடிகை விளையாட்டுக்கு கூறினால் அதை அப்படியே கூறுவது நியாயமில்லை என ரசிகர்கள் அவர்மீது செம டென்ஷனில் இருக்கின்றனர்.
சமீபகாலமான பயில்வான் பேட்டிகளில் சினிமா பிரபலங்கள் பற்றிய உண்மைகளை கூறி பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.