தமிழில் சில்க் சுமிதா வாழ்க்கை கதை படமாகிறது…. ஹீரோயின் யார் தெரியுமா?

131

அனுசுயா பரத்வாஜ்………….

நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக உள்ள படத்துக்கு ‘அவள் அப்படித்தான்’ என பெயரிட்டுள்ளனர். தமிழில் சில்க் சுமிதா வாழ்க்கை கதை படமாகிறது…. ஹீரோயின் யார் தெரியுமா?

நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார்.

தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்த படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ’புதிய ஆரம்பம், கோலிவுட், தமிழ், சில்க் சுமிதாவின் தோற்றம்” என்று தன் படத்தை வெளியிட்டுள்ளார்.

சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை ஏற்கனவே பாலிவுட்டில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இதில் வித்யா பாலன் சில்க் சுமிதாவாக நடித்திருந்தார். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிசிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.