சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!!

127

டாக்டர்……

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே.

மேலும் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இல்லை என்பதால் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும் ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் இல்லை என்றும், முதலில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னரே ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’டாக்டர் ’படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.