சமந்தாவுடன் முதல்முறையாக இணைகின்றாரா தமன்னா ?

93

சமந்தா – தமன்னா…

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா மற்றும் தமன்னா ஆகிய இருவரும் ஒரு படத்தில் கூட இன்னும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா நடித்த தெலுங்கு படம் ஒன்றில் தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார் என்பதை தவிர இருவரும் இணைந்து கேரக்டர்களில் நடிக்க வில்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு குறையாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் அந்தக் குறையைப் போக்கும் வகையில் தற்போது முதல் முதலாக சமந்தா மற்றும் தமன்னா இணைந்துள்ளனர். நடிகை சமந்தா கடந்த சில வாரங்களாக ’சாம்ஜாம்’ என்ற தொலைக்காட்சித் தொடரை நடத்திவருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த தொடரில் சிரஞ்சீவி, விஜய்தேவரகொண்டா உள்பட பல முக்கிய பிரபலங்கள் ஒவ்வொரு வாரமும் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் சமந்தாவின் ’சாம்ஜாம்’ தொடரில் தற்போது தமன்னா கலந்து கொண்டுள்ளார்.

தமன்னா மற்றும் சமந்தா இந்த நிகழ்ச்சிக்காக உரையாடும் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான புகைப்படங்களை தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

என்பதும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமந்தா மற்றும் தமன்னா உரையாடிய இந்த ’சாம்ஜாம்’ நிகழ்ச்சி வரும் 11ம் தேதி ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)