“எனக்கு Mental Block இருக்கா?” ஷிவானியிடம் புலம்பி அழுத பாலா !

89

பாலாஜி…

கடந்த வார இறுதியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன், பாலாஜியை மெதுவாக வறுத்து எடுத்தார்.

கேப்டன்ஷிப்பில் பாலா செய்த ஏமாற்று தனம் அவருக்கு குறும்படம் போட்டு காட்ட அதுமட்டும் இல்லாமல் சனம், பாலா மோதலின்போது பாலா தன்னைத்தானே செருப்பால் அடித்த விஷயத்தை வைத்து கமல் அவரை செய்துவிட்டார்.

அதுவும் இல்லாமல் பாலாஜிக்கு மெண்டல்பிளாக் என்று கூறியது பாலாஜிக்கு அசிங்கமாகி விட்டது.

தற்போது வெளியான புரமோவில் பாலாஜி ஷிவானியிடம் புலம்பி அழுகிறார். ” கமல்சார் ஷோவுல எனக்கு மெண்டல் பிளாக் இருக்கின்றது என்று சொன்னபோது பாலாவுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று யாராவது எனக்கு சப்போர்ட் செய்தார்களா? அந்த நேரத்தில் நான் எந்த அளவுக்கு அதிகப்பிரசங்கி மாதிரி தெரிஞ்சிருப்பேன்” என்று பாலா அழ ஆரம்பிக்க Promo முடிகிறது.