தனுஷின் 3வது படமும் ரிலீசுக்கு தயார்: வைரலாகும் டுவீட் !

102

தனுஷ்…

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே.

அதேபோல் தனுஷ் நடித்து வரும் ‘அட்ராங்கே’ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த படமும் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீசுக்கு தயாராகிவிடும்.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடியும் தருவாயில் திடீரென லாக்டவுன் வந்து விட்டதால் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 9 மாதங்களாக நடைபெறவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் கர்ணன் படத்தின் மீண்டும் தொடங்கிய நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

மேலும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தயாரிப்பாளர் தாணு அவர்களின் மிகப்பெரிய ஒத்துழைப்புக்கு நன்றி என்றும் அனைத்து ’கர்ணன்’ படத்தின் டெக்னீஷியன்கள் மற்றும் சக நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் குறிப்பாக ஒரு சிறப்பு நன்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தனுஷின் இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது.