மாநாடு படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!! யார் தெரியுமா?

103

மாநாடு…….

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் மாநாடு படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் இணைந்திருக்கிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் டேனியல் இணைந்துள்ளார். சிம்புவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள்.