“விஜய் பட Update இங்க, தல பட Update எங்க ?” – வலிமை Team-ஐ சுற்றி வளைக்கும் அஜித் ரசிகர்கள்!

79

வலிமை Update…

நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில்,

நேற்று விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் Update வர, அப்படியே Table Fan-ஐ திருப்புவது போல போனி கபூர் பக்கம் திருப்பினார்கள் அஜித் ரசிகர்கள். ஆனால் வலிமை படக்குழுவினர் சார்பாக சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,

“வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமார்,

அனுபவமிக்க தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள்.

முறையான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்”. இதை பார்த்த விஜய் ரசிகர்கள், ” Update வராது அப்படின்னு சொல்றதுக்கு ஒரு Update-ஆ?” என்று அஜித் ரசிகர்களை கிண்டல் செய்து வருகிறார்கள்.