பாலிவுட் ஹீரோயின்கள் மட்டுமே ஜோடி : பிரபாஸ் கறார் முடிவு !

89

பிரபாஸ்…

‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் நட்சத்திரமாக உயர்ந்தார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த ‘சாஹோ’ படம் ஹிந்தியில் மட்டுமே வசூலைப் பெற்றது.

தற்போது ‘ராதேஷ்யாம்’ படத்தில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்து ‘ஆதி புருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படம், சலார்’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

இவற்றில் ‘ஆதி புருஷ்’ படத்தில் அவருடைய ஜோடியாக பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடிக்கப் போகிறார். நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் தீபிகா படுகோனே தான் ஜோடி.

அடுத்து ‘சலார்’ படத்திலும் பாலிவுட் நடிகையைத்தான் ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என கறாராக சொல்லிவிட்டாராம். அதனால், கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்க உள்ள ‘சலார்’ படத்தில் நாயகியாக நடிக்க திஷா பதானி உள்ளிட்ட சில பாலிவுட் ஹீரோயின்களிடம் பேசி வருகிறார்களாம்.

தென்னிந்திய நடிகைகளை நடிக்க வைத்தால் இந்திய ஸ்டார் என்ற இமேஜ் கிடைக்காது.

எனவே, இனி தான் நடிக்கும் படங்களில் பாலிவுட் நடிகைகள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தன்னை வைத்து படம் தயாரிக்க வருபவர்களிடமும் சொல்லிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.