நடிகர் விஷால் திருமணம் ரத்து : அதிர்ச்சித் தகவல் !

95

விஷால்…

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால்.

அவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்திருந்தார்.

விஷாலுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகையான அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த வருடம் ஐதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது.

ஆனால், அதற்கடுத்த சில மாதங்களிலேயே இருவருக்கும் திருமணம் நடைபெறாது என்ற தகவல்கள் வெளியாகின.

இருவர் தரப்பிலிருந்தும் அது குறித்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.

இதனிடையே, விஷாலுக்காக நிச்சயம் செய்யப்பட்ட அனிஷா ரெட்டிக்கும் வேறொருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாம். சமூக வலைத்தளத்தில் விஷாலுடனான திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை அனிஷா ஏற்கெனவே நீக்கியுள்ளார்.

விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ரத்தானதன் காரணம் இதுவரை வெளியாகவில்லை.

தனது திருமணத்தை சென்னையில் நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடத்தில்தான் நடத்துவேன் என நடிகர் சங்கத் தேர்தலின் போது விஷால் அறிவித்திருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.