த்ரிஷாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி குறித்த தகவல் !

375

த்ரிஷா..

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா என்பது தெரிந்ததே. 20 வருடங்கள் ஒரு நடிகை நாயகியாக நடித்து முன்னணி இடத்தில் இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. மிகச் சில நடிகைகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவுடன் நடித்த நாயகிகள் எல்லாம் தற்போது அம்மா அக்கா அண்ணி வேடங்களில் நடித்து திரையுலகில் இருந்து விலகி வரும் நிலையில் த்ரிஷா இப்போதும் நான்கைந்து படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் த்ரிஷா நடிப்பில் உருவான ’ராங்கி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் நேற்று வெளியாகியது.

நேற்று மாலை 5.30 மணிக்கு ’ராங்கி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. எம் சரவணன் இயக்கத்தில் ஏஆர் முருகதாஸ் கதையில் உருவாகிய இந்த படத்தில் த்ரிஷாவுடன் அனஸ்வரராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சி சத்யா இசையில், சக்தி ஒளிப்பதிவில், சுபாரக் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் த்ரிஷாவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் த்ரிஷா தற்போது ‘பரமபதம் விளையாட்டு’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, சுகர்’, ‘ராம்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.