20 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் ரொமான்ஸ் ஜோடி!

114

பிரசாந்த் மற்றும் சிம்ரன்..

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களாக இருந்தவர்கள் பிரசாந்த் மற்றும் சிம்ரன் என்பது தெரிந்ததே.

‘கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி ,பார்த்தேன் ரசித்தேன் ஆகிய திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்தார்கள் என்பதும் அந்த படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ’பார்த்தேன் ரசித்தேன்’ திரைப்படத்தில் பிரசாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரே படத்தில் இணைத்து நடிக்க உள்ளனர்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தபு நடித்த கேரக்டரில் சிம்ரன் நடிக்க உள்ளார். இதுகுறித்து சிம்ரன் கூறியபோதும் ’நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரசாந்த் உடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படத்தில் தபுவின் கேரக்டர் படம் முழுவதும் வரும் வலிமையான கேரக்டர். அந்த கேரக்டரில் நான் தமிழில் நடிப்பது எனக்கு மிகுந்த சந்தோசம்’என்று கூறினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் ஜெஜெ ஃபெட்ரிக் தெரிவித்துள்ளார்.