சொத்துக்களை அடமானம் வைத்த பிரபல நடிகர்! பணத்தை என்ன செய்தார் தெரியுமா? இப்படியும் செய்வார்களா?

90

சோனு சூட்..

தமிழ் படங்களில் வில்லனாக நம் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சோனு சூட்.

கள்ளழகர், ஒஸ்தி, சந்திரமுகி, அருந்ததி என பல படங்களில் இவரை நாம் பார்த்திருப்போம். அண்மையில் ஆசியவில் டாப் 50 பிரபலங்களில் முதல் இடம் பெற்றார்.

சினிமாவை தாண்டி பல நல்ல உதவிகளை செய்து சேவையாற்றி வரும் அவர் கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு நிறைய நன்மைகள் செய்து வந்தார். புலம் பெயர் தொழிலாளர்களை வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

வெளிநாடுகளில் சிக்கிய மாணவர்களை விமானத்தில் அழைத்து வந்தார். 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, காப்பீடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றையும் செய்துகொடுத்தார்.

இதற்காக அவர் தன் பெரிலும் தன் மனைவில் பெயரிலும் இரண்டு கடைகள் மற்றும் வீடுகள் என்று 8 சொத்துக்களை வங்கியில் ரூ 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளாராம். அவரின் இந்த செயல் பலரையும் ஆச்சரய்ப்படுத்தியுள்ளது.