ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸின் உருக்கமான பாடல் வீடியோ !

110

ட்ரிபிள்ஸ்…

சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.சினிமாவில் நடிப்பதே தன்னுடைய இலக்கு என்று தெரிவித்து வந்தார்.

தெய்வமகள் சீரியல் முடிந்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தெலுங்கில் இவர் நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து அசோக் செல்வன்,ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தாலும் இவரது காதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் வெப் சீரிஸ் உட்பட சில வெப் சீரிஸ்களில் வாணி போஜன் நடித்து வருகிறார்.சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

வைபவ் ஹீரோவாக நடித்துள்ள லாக்கப் படத்திலும் வாணி போஜன் ஹீரோயினாக நடித்துள்ளார்.நடிகர் நிதின் சத்யா இந்த படத்தை தயாரிக்கிறார்.SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.

வெங்கட் பிரபு,ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்துள்ளார்.இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.இந்த படத்திற்கு தாழ்திறவா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த டைட்டில் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வந்த ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வெப் சீரிஸின் சோக பாடல் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலுக்கு ஜெய் இசையமைத்துள்ளார்.