தளபதி 65 படத்தின் கதாநாயகி இவர்தான்? முதன் முறையாக இணையும் ஜோடி..!

113

தளபதி 65…

மாஸ்டர் படத்திற்கு பின் தற்போது தளபதி விஜய் நடிக்கவிற்கும் படம் தளபதி 65. சர்கார் படத்திற்கு பிறகு தளபதி 65யை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் தளபதி 65 படத்தை இயக்கியுள்ளார். மேலும் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றுமுன்தினம் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தளபதி 65 படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் தளபதி 65 படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனாவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடித்தி வருகிறார்களாம்.

மேலும் இது நடந்தால் இப்படத்தின் மூலம் நடிகர் விஜயுடன் முதன் முறையாக ஜோடி போட்டு நடிக்கிறார், நடிகை ரஷ்மிகா மந்தனா.

பொறுத்திருந்து பார்ப்போம் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவருகிறதா? என்று..