ரத்தன் டாடா பயோபிக்கில் நடிக்கின்றாரா மாதவன்? அவரே அளித்த விளக்கம்!

78

மாதவன்..

இந்திய திரையுலகில் அவ்வப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வரும் என்பதும், கிட்டத்தட்ட அனைத்து பயோபிக் திரைப்படங்களும் வெற்றி பெற்றுவருகிறது என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’சூரரைப்போற்று’ மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே.

மேலும் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படத்தில் தற்போது மாதவன் நடித்து வரும் நிலையில் அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் மாதவன் நடிக்கவிருப்பதாக புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளிவந்தது.

இதனை அடுத்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாதவன் ’இந்த செய்தி உண்மை கிடையாது. அப்படி ஒரு ப்ராஜெக்ட் இதுவரை ஆலோசனை செய்தது இல்லை. முழுக்க முழுக்க இது வதந்தி. ரசிகர் ஒருவரின் விருப்பத்தின் காரணமாக உருவான புகைப்படம் இது’ என்று பதிலளித்துள்ளார்.

மாதவனின் இந்த பதிலை அடுத்து ரத்தன் டாடா பயோபிக் திரைப்படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் மணிரத்னம் இயக்கிய அம்பானி வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘குரு’ படத்தில் கச்சிதமாக நடித்த மாதவனை எதிர்காலத்தில் ரத்தன் டாடா கேரக்டரில் நடிக்க பிரபல இயக்குனர் யாராவது முயற்சிக்கலாம் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.