குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. அழகிய தருணத்தின் புகைப்படம்..!

104

ரஜினிகாந்த்..

இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

நேற்று இவரின் பிறந்தநாளை உலகமெங்கும் இருக்கும் ரஜினியின் ரசிகர்கள் பலரும் கொண்டாடினார்கள். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படத்தை ரஜினியின் மகள் சௌதர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.