நயன்தாராவை சுற்றி வளைத்த மக்கள் கூட்டம்! வாக்கு வாதம்! பொது இடத்தில் பரபப்பு!

393

நயன்தாரா…

நடிகை நயன்தாராவின் நடிப்பில் கடந்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான மூக்குத்தி அம்மன் படம் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ 25 கோடிகளை கடந்து நல்ல வசூலும் செய்தது.

இதனையடுத்து நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தி காத்து வாக்குல 2 காதல் படத்தில் இணைந்தார். விஜய் சேதுபதி, சமந்தாவும் இப்படத்தில் நடிக்கின்றனர். அண்மையில் இதன் படபூஜை நடைபெற்றது.

இதனையடுத்து சென்னை தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நேற்றுமுன்தினம் காலை படப்பிடிப்பு நடைபெற்றது.

நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது அவரை காண நிறைய வாலிபர்கள், பொது மக்களும் கூடினர். இதனால் அப்பகுதி பரபரப்பானது.