மீண்டும் இணைந்த பிரேமம் நாயகிகள்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

80

பிரேமம்………..

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் கதாநாயகிகளாக அறிமுகமாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மூவரில் இருவர் தான் சாய்பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன்..

இந்த இருவரும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கில் நானி கதாநாயகனாக நடிக்கும் ‘சியாம் சிங்க ராய்’ என்கிற படத்தில் தான் இவர்கள் கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

அதேபோல மிடில்கிளாஸ் அப்பாயி என்கிற படத்தை தொடர்ந்து நானியும் சாய்பல்லவியும் இந்த படத்தின் மூலம் இணைகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர கீர்த்தி ஷெட்டி என்கிற இன்னொரு கதாநாயகியும் இதில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடித்த ‘டாக்ஸிவாலா’ என்கிற படத்தை இயக்கிய ராகுல் சாங்ரித்யன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.