2021ல் வசூல் வேட்டை ஆட திட்டம் போடும் தளபதி விஜய்.. பாக்ஸ் ஆபிஸ் அதிரும் நேரம்..! முழு விபரம் உள்ளே !!

93

தளபதி விஜய்……..

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வரும் தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தளபதி 65 திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக பெரிதும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதனால் அடுத்த ஆண்டு தளபதி விஜய்யின் நடிப்பில் மாஸ்டர் மற்றும் தளபதி 65 என இரு திரைப்படங்கள் வெளியாவதால், விஜய்க்கு அடுத்த வரும் பாக்ஸ் ஆபிசில் மறக்க முடியாத ஆண்டாக அமையும் என்று கூறப்படுகிறது.

அதிரடியாக வந்த விஜய்யின் 65வது பட தகவல்- சிவகார்த்திகேயன் போட்ட டுவிட் என்ன தெரியுமா?

எதுவாயினும் பொறுத்திருந்து பார்ப்போம், இரு படங்களின் ரிலீஸ் தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக.