ஹிப்ஹாப் தமிழா அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு! வெளிவந்த தகவல்..! என்ன தெரியுமா ?

117

ஹிப்ஹாப் தமிழா………

ஹிப்ஹாப் தமிழா அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!
இசையமைப்பாளராக இருந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானா.ர் அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது

இந்த நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’அன்பறிவு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜோடியாக காஷ்மிரா என்ற நடிகை நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நெப்போலியன், விதார்த், சசி குமார், ஊர்வசி, சங்கீதா உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தை அஸ்வின் ராம் என்பவர் இயக்க இருப்பதாகவும் மாதேஷ் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் பிரதீப் ராவத் படத்தொகுப்பு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இன்றைய பூஜையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, நாயகி காஷ்மீரா, இயக்குனர் அஸ்வின் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது