ஏர்போர்ட்டில் தொலைந்த வைர கம்மல்; கண்டுபிடித்தால் சன்மானம்! – நடிகை அறிவிப்பு!!

88

ஜூஹி சாவ்லா……

பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லா மும்பை விமான நிலையத்தில் தொலைந்த வைர கம்மலை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு சன்மானம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியில் 1990களில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஜூஹி சாவ்லா. அதிகமாக ஷாரூக்கான், சல்மான்கான், அஜய் தேவ்கன் போன்றவர்களுடன் நடித்த இவர், தற்போது சினிமா துறையில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல்லின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனது கணவர் மற்றும் நடிகர் ஷாரூக்கானுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பாக மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தனது வைர கம்மலில் ஒன்றை தொலைத்து விட்டதாக ட்விட்டர் மூலமாக பதிவிட்டுள்ள அவர்,

அந்த கம்மல் தான் 15 வருடங்களாக தினமும் அணிந்து வருவது என்றும், அதை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழங்குவதாகவும் கூறி அதன் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.