நடிகை கஸ்தூரி…….
சினிமா வாய்ப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் நாட்டு நடப்பு பற்றி துணிச்சலுடன் பேசி வருபவர் நடிகை கஸ்தூரி.
தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் தேடிவந்தபோதும் அவர் நடிக்காமல் இருந்தார். தற்போது அக்னி நட்சத்திரம் தொடரில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: அக்னி நட்சத்திரம் பெண்கள் பி ர ச்சினைகளை பேசுகிற தொடர். பெண்களின் பா து காப்பையும் விளக்கும் சீரியல்.
அதனால் தான் நான் நடிக்க சம்மதித்தேன். எனக்கு பொருந்துகிற கதாபாத்திரம். இதுபோன்ற கதாபாத்திரம் வந்தால், சின்னத்திரை, வெள்ளித்திரை ஆகிய இரண்டிலும் நடிப்பேன் என்கிறார் கஸ்தூரி. இவ்வாறு கஸ்தூரி கூறினார்.