ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் ஒன்றுசேரத் தயார்: கமல் அறிவிப்பு!!

88

ரஜினியுடன் கமல்…………..

வரும் சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து களமிறங்க உள்ளார். ஏற்கனவே கட்சியை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட கமல்ஹாசனும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து இந்த தேர்தலை சந்திப்பார்களா? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆன்மீக அரசியல், பகுத்தறிவு அரசியல் என இருவரும் அரசியலில் வெவ்வேறு பாதையில் இருந்தாலும், மக்கள் நலன் என்ற ஒரே கொ ள்கை இருவரிடமும் இருப்பதால் இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லாமல் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள கமல்ஹாசன் ரஜினியுடன் கூட்டணி அமைக்க தான் தயார் என்று ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து தற்போது சிவகாசியில் அவர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ’மக்களுக்கு நல்லது நடக்கும் எனில் ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் ஒன்று சேரத் தயார்’ என்று மீண்டும் ரஜினியுடன் இணைவதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.