மாறா……..
கொரோனா வைரஸ் பா திப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறந்தபோதிலும் போதுமான பார்வையாளர்கள் வரவில்லை என்ற காரணத்தினால் மீண்டும் ஒரு சில திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன
இந்த நிலையில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வந்தால் மட்டுமே மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களை திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
இருப்பினும் திரையரங்குகள் திறந்தாலும் அதிக அளவிலான திரைப்படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்யவே தயாரிப்பாளர்கள் விரும்பி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மாதவன் நடித்த ’மாறா’ திரைப்படமும் தற்போது ஓடிடியில் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
’மாறா’ படம் வரும் ஜனவரி 8ஆம் தேதி ஓடிடியில் அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவன் ஷாரதா ஸ்ரீநாத், ஷிவாதா, மெளலி அலெக்சாண்டர் பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது