நயன்தாரா…
தென்னிந்திய சினிமாவில் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க பல நடிகைகள் போராடி வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 14 ஆண்டுகளாக தன் நடிப்பு திறமையாக் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன் தாரா.
நடிகைகள் சிலர் கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள், கவர்ச்சி காட்டும் சில நடிகைகள் சரியாக நடிக்க மாட்டார்கள். நயன் தனது திரை மற்றும் சொந்த வாழ்வில் பல துயரங்களை கடந்து வந்தும் கூட, இந்த மூன்றிலுமே டாப் கியரில் கொடி கட்டி பறக்கிறார்.
சோசியல் மீடியா பக்கமே வராமல் இருந்த நயன்தாரா, தற்போது சமூல வலைத்தளங்களில் செம்ம ஆக்டீவாக இருக்கிறார். காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு எங்கு போனாலும் சரி, கோவில், கோவிலாக ஆன்மீக பயணம் போனாலும் சரி சுட, சுட செல்ஃபி எடுத்து சோசியல் மீடியாவில் பதிவேற்றி விடுகிறார்.
தற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் நயன்தாரா. அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவேற்றி ரசிகர்களை பித்துபிடிக்க வைக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் நயன்தாராவிடம் பிரபல இணையதளம் நடத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் நடித்ததற்காக நான் வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
கொலையுதிர் காலம் படத்தில் நடித்ததை நினைத்து மிகவும் வெட்கப்படுவதாகவும், அந்த படத்தின் ஸ்க்ரிப்டை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டது தான் அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா.