மிஷ்கின் படத்தில் பாடிய சூப்பர் சிங்கர் பிரபலம் !

79

சூப்பர் சிங்கர் பிரபலம்..

சைக்கோ படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகி ஒருவர் பாடி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். இவர் சைக்கோ படத்திற்குப் பிறகு பிசாசு 2 படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார்.

இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான பிரியங்கா ஒரு அற்புதமான பாடலைப் பாடி இருப்பதாக மிஸ்கின் கூறியிருக்கிறார்.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.