தனுஷ் – செல்வராகவன் இணையும் புதிய படம் – முதல் அப்டேட் வெளியானது !

93

தனுஷ் – செல்வராகவன்…

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

கடைசியாக சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கிய செல்வராகவன், அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதனை அவரே சமீபத்தில் டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், அப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி கேமரா அருகில் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள செல்வராகவன், ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக கூறி உள்ளார்.

மேலும் இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.