13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த ‘காதல்’ ஜோடி…. வைரலாகும் புகைப்படம்!

99

காதல் ஜோடி..

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். படங்களை தயாரிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்தவகையில் அவர் முதல்முதலாக தயாரித்த படம் காதல். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்த இப்படத்தில் பரத், சந்தியா இருவரும் காதல் ஜோடிகளாக நடித்திருந்தனர். இப்படத்தில் இவர்களது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கூடல்நகர் படத்தில் ஜோடியாக நடித்தனர்.

இந்நிலையில், பரத்தும் சந்தியாவும் 13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் ஒன்றாக எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.