விஷாலுக்கு ஜோடியாகும் டிக் டாக் பிரபலம் – யார் தெரியுமா?

108

விஷால்…

செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷால்.இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்து திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

சண்டை கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், இரும்பு திரை, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் நடிகர் விஷாலுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது.

மேலும் விஷால் தற்போது சக்ரா, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் சக்ரா படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் இப்படங்களுக்கு பிறகு ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிக் டாக் பிரபலம் மிருணாளினி ரவி நடிக்க இருக்கிறாராம்.