முதல் நாள் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தா!

113

சமந்தா…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை பார்த்தோம்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வருகை தந்த விஜய்சேதுபதிக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து வரவேற்ற காட்சியும், விக்கியை கட்டிப்பிடித்து விஜய்சேதுபதி அன்பை பரிமாறிய வீடியோ காட்சியும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.

அதேபோல் நயன்தாராவும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவ்வப்போது கலந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள சமந்தாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’சமந்தா முதல் நாள் படப்பிடிப்புக்கு தயாராக மேக்கப் போடும் காட்சிகள் உள்ளது.

அப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து சமந்தாவை வரவேற்கும் போது ’ஒழுங்கா படம் எடுப்பீர்களா’ என்று விக்னேஷ் சிவனை கலாய்த்தார்.

அதற்கு சிரித்துக்கொண்டே விக்னேஷ் சிவன், ‘தெரியலை பார்ப்போம்’ என்று கூறிவிட்டு, ‘இன்னும் பத்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் ஆனா நீங்க பொறுமையா வாங்க’ என்று பதிலுக்கு கலாய்க்கும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது.

முதல் நாள் படப்பிடிப்பிலேயே இயக்குனர் விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தாவின் இந்த வீடியோவை சினிமா ரசிகர்கள் ரசித்துவருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)